எனது தம்பியைக் காவல்துறையினர் கைது செய்து வைத்திருந்ததைக் கேள்வியுற்ற நான் யாழ்ப்பாண காவல்துறையில் முறைப்பாடு செய்வதற்காக சென்றுகொண்டிருந்தவேளை வேலணைப் பிரதேசத்தில் வழிமறித்த மக்கள் என்னை பெரிய போஸ்ரில் கட்டிவைத்து அடித்துக்கொண்டிருந்தபோது சசியின் அண்ணாவா என விசாரித்தபின்னர் மக்கள் என்னை அடிக்காதவாறு பாதுகாத்தார் என சுவிஸ்குமார் சாட்சியமளித்துள்ளார்.
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் விதியா பாலியல் வன்புனர்வின்பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான முறைப்பாட்டாளர்களின் விசாரணை முடிவுற்ற நிலையில் நேற்று எதிரி தரப்பினர்களிடமிருந்து சாட்சியங்கள் பதிசெய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், இன்றைய தினம் குறித்த வழக்கின் 9ஆவது எதிரியான மகாலிங்கம் சசிகுமாரான சுவிஸ்குமார் சாட்சியமளிக்கையில்,
எனது தம்பியார் ஊர்காவற்றுறை காவல்றையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் எனக் கேள்விப்பட்டதும் யாழ். காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்வதற்காக பயணித்துக்கொண்டிருந்தவேளை வேலணையில் இடைமறித்த மக்கள் என்னை போஸ்ரில் கட்டிவைத்து அடித்தனர்.
இதன்போது அங்குவந்த விஜயகலா மடம் நீங்கள் சசியின் அண்ணாவா எனக் கேட்டார். நான் அதற்கு ஓம் எனப் பதிலளித்தேன். இதன்போது அவர் மக்களைக் தாக்க வேண்டாம் என்றும், என்னை அவிழ்த்து விடுமாறும் கூறினாா். அதனால் மக்கள் என்னை அவிழ்த்து விட்டாா்கள்.
எனது குடும்பத்தினா் அந்த இடத்துக்கு வரும் வரை 2 மணி நேரமாக விஜயகலா மடம் என்னுடனேயே இருந்தாா். அப்போது இரவு 12 மணி. பின்னா் எனது மனைவியும் எனது அம்மாவும் அந்த இடத்துக்கு வந்து என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்” எனத் தெரிவித்தார்.