லெப்டினன் கேணல் கலையழகன் மறக்கத்தகுமோ…? 18.04.2017
லெப்டினன் கேணல் கலையழகன்.
புலம் பெயர் சமூகத்தினால் மறக்க முடியாத ஒரு தமுழீழ படையக வீரன் கலையழகன். புன் சிரிப்பாலும் அமைதியானஇ நிடகாத்திரமானஇ ஆரோக்கியமான பேச்சுக்களாலும் தன்னை தமிழீழ தேசத்தோடு நெருக்கி வைத்திருந்த ஒரு நல் அரசியலாளன்.
தேசத்தின் குரல் பாலா அண்ணரின் முதல்நிலை மாணவனாக அரசியலறிவை பெற்றாலும் கனரக ஆயுதங்கள் முதல் படையக சிறப்பு பயிற்சிகளை பெற்று முழுமையான போராளியாகியவன். மொழித் தேர்ச்சியும் திடமான பேச்சுக்களும் அவனை சர்வதேச பணிகளுக்கான போராளியாக இனங்காட்டிய போது வானம் ஏறி பயணிக்கத் தொடங்கி இருந்தான். கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரியில் பாலா அண்ணரால் புடம்போடப்பட்டதாலோ என்னவோ கிட்டண்ணரின் வேகமும் விவேகமும் பாலாண்ணரின் பரந்த அரசியல் கூர்மையும் அவனை அவர்களைப் போலவே செயற்பட வைத்தது.
அனைத்துலக தொடர்பக பிரிவின் துணைப் பொறுப்பாளன் என்ற நிலையில் எமது தேசத்துக்கான அத்தனை பணிகளையும் ஒருங்கிணைத்து எமக்கான வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய பெரும் பங்காளனாய் இருந்த பெரும் வேங்கை தனது தேசத்துக்கான பணியின் போது தவறுதலாக வெடித்த வெடி பொருளின் பசிக்கு இரையாகி வீரச்சாவடைந்தான் எனும் செய்தி சர்வதேச தமிழர்களையே அதிர வைத்தது.
இவனின் வழித்தடம் பற்றும் ஒவ்வொரு சர்வதேச செயற்பாட்டு உறுப்பினர்களும் உறுதி எடுத்து கொள்வோம் கலையழகனின் ஒவ்வொரு தடமும் தமிழீழம் பற்றியதே. அவனின் பாதச்சுவடுகள் ஒவ்வொன்றும் தேசிய தலமையின் வழி நடத்தலே. அவனின் திருவுருவப்படம் முன்னே சத்தியம் செய்து அவன் காட்டிய வழி நகர்வோம்… பிரிவினைகள் போட்டிகள் தவிர்த்த ஒரு குடையின் கீழ் இணைந்த தமிழர்களாக…
– கவிமகன்