சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஏராளமான பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 26ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
பத்திரிகையாளர் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும் மூத்த செய்தியாளருமான மோகன் தலைமையில் குறித்த உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு அதனை நிறைவு செய்து விட்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இங்கு பேசிய மூத்த பத்திரிகையாளர்களின் உரையிலிருந்து, எவ்வளவு பெரிய அவலத்தில் பத்திரிகையாளர்கள் வாழ்கின்றனர் என்பதை உணர முடிகிறது.
பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு போதுமான வருமானம் இல்லை, பணிப் பாதுகாப்பு இல்லை, 1990 இற்குப் பிறகு பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்கும் நடவடிக்கை எதையும் அரசு எடுக்கவில்லை.
பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணும் வகையில் அண்டை மாநிலங்களில் உள்ளது போன்று “பிரஸ் அகடமி” இங்கு இல்லை.
ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கையும் அதைப் பெறுவதற்குள் அவர்கள் சந்திக்கும் சிரமங்களையும் கேட்டால் வருத்தமாக உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் பத்திரிகையாளர்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் உரிய முயற்சிகள் எடுக்க வேண்டும் என இப்போராட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.