புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வழக்கின் எதிரி தரப்பு சாட்சியங்கள் தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெறுகின்றன.
அந்த வகையில், வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்படிருந்த நிலையில் நேற்றும், இன்றும் 9 எதிரிகளினதும் சாட்சியப் பதிவுகள் இடம்பெற்றன.
இந்நிலையில், எதிரி தரப்புச் சாட்சியங்கள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு வழக்குத் தொகுப்புரைக்காக நியமிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வழக்குத் தொடுநர் தரப்பும், எதிரி தரப்பும் வாய்மொழி மூல மற்றும் எழுத்து மூல தொகுப்புரையை வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, வித்தியா கொலை வழக்கில் எதிர்வரும் 12ஆம் திகதி தொகுப்புரை நிறைவு பெற்றதும், தீர்ப்பாயத்தில் தீர்ப்பு திகதி அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.