போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தப்பியோடவில்லையெனவும் அவரது பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது எனவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேசினி கொலன்னே தெரிவிக்கையில்,
“பிரேசில், கொலம்பியா, பெரு, சிலி, ஆஜென்ரீனா, சுரினாம் ஆகிய நாடுகளுக்கான தூதுவராக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய ஜெனரல் ஜெயகத் ஜயசூரிய, நேற்றுமுன்தினம் பிரேசிலை விட்டுப் புறப்பட்டு விட்டார். அவர் இன்று கொழும்பை வந்தடைவார்.
இந்த மாதத்துடன் அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையிலேயே நாடு திரும்புகிறார்.
போர்க்குற்ற வழக்கினால் அவர், பிரேசிலை விட்டு வெளியேறியுள்ளதாக வெளியான செய்திகள் தவறு” எனத் தெரிவித்தார்.
ஆனால், போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நாட்டைவிட்டுத் தப்பியோடியமையை பிரேசில் நாட்டு வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.