அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை ‘ஹார்வே’ புயல் ருத்ர தாண்டவமாடி விட்டது. அந்த நாட்டின் நான்காவது பெரிய நகரம் என்ற சிறப்பை பெற்றுள்ள ஹூஸ்டன் நகரம், வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இந்த நகரத்தில் மட்டுமே புயல், வெள்ளத்தில் சிக்கி நேற்றைய நிலவரப்படி இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அங்குள்ள பிரையான் ஏரியில் ஆனந்தமாக நீச்சலடித்து குளிக்க சென்ற ஒரு மாணவரும், மாணவியும் மூழ்கினர். இது குறித்து உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் போராடி அந்த மாணவரையும், மாணவியையும் மீட்டு விட்டனர். அவர்கள் அங்கு ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.