நேற்று பிற்பகல் 5 மணியளவில் இந்திய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரை வரவேற்றனர்.