இரண்டு நாட்கள் இடம்பெறும் இந்த மாநாட்டில் 35 நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சீஸேல்ஸ் உப ஜனாதிபதி வின்சன்ட் மார்ட்டின், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரால் இந்த மாநாடு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டில் விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நேற்று இலங்கை வந்தார்.
அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜெய்சங்கரும் வருகை தந்துள்ளார்.
முதலாவது இந்து சமுத்திர மாநாடு சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.