மட்டக்களப்பு விவசாய அமைச்சால் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு கரடியனாறு விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலையக் கட்டடத் தொகுதித் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், சிறுபான்மையினருக்குத் தீர்வு கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவும், நல்லாட்சியைச் சீர்குலைக்கவும் இனவாதிகள் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.
ஆனால், இந்த நல்லாட்சி மூலமாகவே சிறுபான்மை மக்களுக்கு சிறந்ததொரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதற்காக சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், றவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.
சிறுபான்மையினருக்கு சிறந்த வரப்பிரசாதங்களை அரசியல் மாற்றத்தினூடாக நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வருமாக இருந்தால், காலமெல்லாம் நல்லாட்சி தொடர நாம் பல தியாகங்களைச் செய்ய தயாராகவுள்ளோம் எனத் தெரிவித்தார்.