முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய இதனை கூறியுள்ளார். பிரேசிலுக்கான இலங்கை தூதுவராக ஜகத் ஜயசூரிய பணியாற்றியிருந்த நிலையில் அவருக்கு எதிராக அந்நாட்டில் யுத்தக் குற்றச்சாட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கிருந்து நாடு திரும்பியுள்ள ஜகத் ஜயசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டுமாக இருந்தால், அந்த பொறுப்பு முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே உள்ளது.
ஏனெனில், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் அவரே இராணுவத் தளபதியாக இருந்தார் என கூறியுள்ள ஜகத் ஜயசூரிய, தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்.
இதேவேளை, ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக International Truth and Justice Project (ITJP) என்ற அமைப்பு, தென் அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றின் ஊடாக, பிரேசிலில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக பல்வேறு தரப்பினர்களும் குரல் கொடுத்து வருகின்ற நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.