கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவினால் நேற்று மாலை திணைக்களம் மற்றும் அமைச்சுகளில் கடமையாற்றிய 7 செயலாளர்களுக்கு பதவி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதில், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளராக இருந்த ஏ.எச்.எம்.அன்சார், பயிற்சி மற்றும் ஆளணிப் பிரிவிற்கும், பயிற்சி மற்றும் ஆளணிப் பிரிவின் செயலாளராக இருந்த கலாமதி பத்மராஜா சுகாதார அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த கே.கருணாகரன் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கும், வீதி அபிவிருத்தித் திணைக்கத்தில் பணியாற்றிய ஐ.கே.ஜீ.முத்துபண்டா பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கும், அதிலிருந்த எம்.டப்ளியூ.ஜீ.திசாநாயக்க கல்வி அமைச்சுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.பி.எம்.அசங்க அபேவர்த்தன ஆளுனரின் செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த பதவி மாற்றங்கள், புதிய ஆளுநரால் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்ன நோக்கத்திற்காக இவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்று எங்களுக்குத் தெரியாது.
எங்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமுமில்லை. மத்திய அரசாங்கத்திலிருந்து இந்த மாகாணத்துக்கென உள்வாங்கப்பட்ட செயலாளர்களை மாகாணத்துக்குள் தேவைக்கு ஏற்றவாறு பதவி மாற்றம் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரமிருக்கிறது.
இதற்கு சட்டரீதியாக, அரசியல் ரீதியான அமைச்சர்களிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. ஆனால் எதிர்காலத்தில் அமைச்சரவையும், ஆளுநரும் மிகவும் நெருங்கிய உறவுகள் ஊடாக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்த பதவி மாற்றம் ஒரு தடையாக இருக்காதா?
இருந்தாலும் இந்தச் செயலாளர்கள் கடந்த காலத்தில் அர்ப்பணிப்பாக நிர்வாகத் திறனைக் கொண்டு செல்வதற்கும் சமூக சேவையைப் பூர்த்தி செய்வதற்காக மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றியவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. எதிர்காலத்திலும் சிறப்பான சேவையை ஆற்றுவார்கள்.
இருந்தாலும் இந்த பதவி மாற்றம் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டது ஆராயப்பட வேண்டிய விடயமே என சுட்டிக்காட்டியுள்ளார்.