தொழிற்சாலையில் தேயிலை அரைத்துக் கொண்டிருந்த வேளையில் அதிகாலை 4 மணியளவில் குறித்த தீ விபத்து சம்பவித்துள்ளது.
இதன் காரணமாக தொழிற்சாலை பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு தெய்வாதீனமாக தொழிலாளர்கள் உயிர் தப்பியுள்ளதாகவும் பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் தேயிலை அரைக்கும் பகுதியில் திடீரென தீ பரவியதாகவும், அதனைத் தொடர்ந்து தோட்ட பொதுமக்களும் பத்தனை பொலிஸாரும் இணைந்து 30 நிமிடங்களின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும், விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.