இறுதிப் போர் நடவடிக்கைகளில் இருந்து தம்மை, அப்போதைய இராணுவத்தளபதி சரத் பொன்சேகா விடுவித்தமைக்கான எழுத்து மூல ஆவணம் தம்மிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெகத் ஜெயசூரியவின் மீது பிரேசிலில் போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் அவர் நாட்டுக்கு திரும்பினார்.
இந்தநிலையில் நேற்று சரத் பொன்சேகர், ஜெகத் ஜெயசூரியவின் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியங்கள் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்தே ஜெகத் ஜெயசூரிய தமக்கும் இறுதிப் போர் நடவடிக்கைகளுக்கும் தொடர்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதிப் போரை பொறுத்தவரையில் அதனை அவரே முடிவுக்கு கொண்டு வந்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.