துணுக்காய், உயிலங்குளம், ஆலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், முக்கொம்பன், பூநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் ஸ்கந்தபுரம் கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் பஸ் சேவைகள் நடைபெற்ற நிலையில் அக்கராயனில் துணுக்காய் பஸ் தரிக்கக் கூடாது என கிளிநொச்சி தனியார் பஸ் சங்கத்தினர் அறிவித்த நிலையில் பேருந்து சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக இடம் பெறவில்லை.
இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு குறித்த கிராமங்களின் பொது அமைப்புகள் மனுக்கள் கையளித்த போதிலும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்ட போதிலும் பேருந்து போக்குவரத்து இடம்பெறவில்லை.
இந்நிலையில் வடமாகாண போக்குவரத்து அமைச்சு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.