கொழும்பில் நடைபெற்ற சமுத்திர பிராந்திய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை வந்திருந்த ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நேற்று மாலை ஜனாதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்த போது இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
மேலும் இலங்கைக்கு வழங்கி வரும் ஜய்கா உதவிகளை தொடர்ந்தும் வழங்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான நண்பன் என்ற வகையில் இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் செய்து வரும் பங்களிப்பை மதிப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, வேறு நோக்கங்கள் இன்றி நேர்மையான நண்பனாக ஜப்பான் வழங்கி வரும் உதவிகளுக்கு இதயப்பூர்வமாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.