இலங்கை அம்பாந்தோட்டையில் எந்தவொரு வெளிநாட்டு கடற்படைத் தளமும் அமைக்கப்பட மாட்டாது என்று அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொழும்பு துறைமுகம், அம்பாந்தோட்டை துறைமுக மேம்பாட்டுத் திட்டங்களை சீனா மேற்கொண்டு வருகிறது. துறைமுக மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் வெளிநாடுகளில் சீனா தனது கடற்படைத் தளத்துக்கு அடித்தளம் அமைத்து வருகிறது. பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசத்தில் இதுபோல் துறைமுக திட்டங்களை சீனா மேற்கொண்டு வருகிறது.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியின்போது அம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தில் சீனாவுக்கு 80 சதவீத பங்குகளும் இலங்கைக்கு 20 சதவீத பங்குகளும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சீனா வசம் 69.55 சதவீத பங்குகளும் இலங்கை வசம் 30.45 சதவீத பங்குகளும் இருக்கும் வகையில் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
இந்தப் பின்னணியில் இலங்கை தலைநகர் கொழும்பில், ‘இந்திய பெருங்கடல் மாநாடு’ நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இரண்டாம் நாளான நேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாநாட்டில் பேசினார். அவர் கூறியபோது, அம்பாந்தோட்டையில் எந்தவொரு வெளிநாட்டு கடற்படைத் தளமும் அமைக்கப்படாது. மேலும் இந்திய பெருங்கடல் மேம்பாட்டுக்காக நிதியம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மாநாட்டில் பங்கேற்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு வர்த்தகம், மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவையும் அவர் சந்தித்துப் பேசினார்.
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேற்று முன்தினம் சுஷ்மா சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது என்று அவர் வாக்குறுதி அளித்தா