எதிர்வரும் ஆண்டில் அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் – மாங்குருஓயா வத்த பிரதேசத்தில் புதிய தேசிய பாடசாலையொன்றை அமைக்கும் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்று இதனை நேற்று தெரிவித்துள்ளார்.
20ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஒரே நாளில் அனைத்து மாகாணசபைத் தேர்தல்களையும் நடாத்தும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
எனினும், மாகாணசபைத் தேர்தல்களை ஒத்தி வைக்காது துரித கதியில் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.