வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தினரால் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் கௌரவிப்பும், பூவல் சஞ்சிகை வெளியீடும் நேற்று நடைபெற்றிருந்தன.
எமது தமிழ் சமூகம் தொலைபேசி கலாச்சார மாயைக்குள் மூழ்கி காணப்படுவதாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி தெரிவித்துள்ளார்.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உலகத்தோடு ஒப்பிட்டு பார்க்கின்ற போது எமது தமிழ் எவ்வளவு பலவீனமாக அல்லது எவ்வளவு தூரத்திற்கு பின்தங்கிய நிலையில் இருக்கின்றது என்ற விடயத்தை புலம்பெயர் உறவுகள் விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் சமூகம் முன்னிலைபெற வேண்டும் என்று அரசியல்வாதிகள், சில அதிகாரிகளும், சமூக ஆர்வளர்கள் அர்ப்பணிப்புடன் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.