கொச்சியின் கடற்படை தளத்தில் வைத்து இந்த கப்பல் இலங்கையிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதன்போது இலங்கை கடற்படையின் சார்பில் கடல்வலய பாதுகாப்புத்துறை பணிப்பாளர் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க பிரசன்னமாகியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி வருணா சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு இந்தியாவினால் இலங்கைக்கு ஐஎன்எஸ் சாராயு என்ற கப்பல் வழங்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ஐஎன்எஸ் கிருஸ்ணா என்ற கப்பல் இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும்,1968 ஆம் ஆண்டு எவ்எம்எஸ் அன்ரோமேடா என்ற கப்பலும் வழங்கப்பட்டுள்ளது.