ஜெனரல் ஜகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது.
எனவே சரத் பொன்சேகாவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி, அவரது பீல்ட் மார்சல் பதவியும் நீக்கப்பட வேண்டும்.
குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
குற்றவியல் சட்டத்தின் அரச விரோத சரத்துக்களின் அடிப்படையில் உடனடியாக சரத் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.
பீல்ட் மார்சல் மற்றும் அமைச்சுப் பதவியை வகித்து வரும் ஒருவர் இவ்வாறான கருத்து வெளியிடுவது நியாயமாகுமா, இவரை பதவியில் நீடிப்பது சரியானதா?
சரத் பொன்சேகாவின் கருத்துக்களை பிரமர் அனுமதிக்கின்றார் என்பது அவரது மௌனத்தின் மூலம் தெளிவாகின்றது.
போருக்கு தலைமை தாங்கியவர்களை சிக்க வைக்கும் முயற்சியாக இதனை நோக்க வேண்டும்.
புலம்பெயர் சமூகத்தின் கோரிக்கையே இவ்வாறு நிறைவேற்றப்படுகின்றது.
மங்கள சமரவீரவிற்கும் புலம்பெயர் சமூகத்திற்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றில் ஒரு யோசனை கொண்டு வர திட்டமிட்டுள்ளேன் என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.