நீட் தேர்வு தமிழக உரிமைக்காக தி.மு.க. போராடும் என்று கனிமொழி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நீட் தேர்வு பிரச்சினை குறித்து தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் அதன் நிர்வாகிகள் அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்கள். மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாணவி அனிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கனிமொழி நிருபர்களிடம் கூறுகையில், அனிதாவின் மரணத்தை தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகக்திற்கு முழுவிலக்கு அளிக்க இளைஞர்கள், மாணவர்கள் போராடி வருகிறார்கள்.
தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு பறிக்க முயலும் போதெல்லாம் தி.மு.க. அதனை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறது. அந்த போராட்டங்கள் அனைத்திலும் சமூக நீதியை நிலை நாட்டுவதற்கானது என்றார்.