டிடிவி தினகரன் நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தார். செப் 9 இன்று ஆர்ப்பாட்டம் நடப்பதாக காவல்துறை அனுமதியும் பெற்றிருந்தனர்,
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதித்தது. இதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து நாளை நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்கிறேன் என்று தெரிவித்தார்.
நீட்டை கொண்டு வந்தது மத்திய அரசு. 7.5 கோடி மக்களின் எண்ணத்துக்கு மதிப்பளித்து, தமிழக மாணவர்களின் படிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.
தமிழகத்திற்கு நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய அரசே அதை நீக்க வேண்டும். இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.