தென் அமெரிக்க நாடான மெக்சிகோவின் பிஜிஜியாபன் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 123 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் மெக்சிகோ நகரில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் தரைமட்டமாக சரிந்துள்ளதாகவும், இதில் சிக்கி 34 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. கடந்த 85 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.