தற்போது பல நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வரும் ஒரே நாடாக, வட கொரியா உள்ளது. ஆனால் அதன் தலைவரை போட்டு தள்ள அமெரிக்காவால் முடியாது என்கிறார்கள். காரணம் என்னவென்றால் அவர் பல வருடங்களுக்கு முன்னரே அமைத்து வைத்திருக்கும் சுரங்க பாதைகள் என்கிறார்கள். வட கொரியாவில் இருந்து சீனாவில் எல்லைக் கிராமம் வரை இந்த சுரங்கப்பாதை நீண்டு செல்கிறது. வட கொரியாவில் உள்ள மலைப்பாங்கான பிரதேசம் ஒன்றில் தான் தனது சகல ராணுவ தளங்களையும் நிலைகொள்ள வைத்துள்ளார் அன் நாட்டின் அதிபர் கிம் ஜொன் உங். அதற்கு கீழ் பல மைல்கள் நீண்டு செல்லும் சுரங்கப் பாதை உள்ளது.
இதனால் வெளியே அணு குண்டு போர் நடந்தால் கூட, அதனால் ஒரு சிறு பாதிப்பு கூட அவருக்கு வராது. பல மாதங்கள் அவரால் சுரங்கப் பாதையில் வசிக்க முடியும். இல்லையென்றால் அதனூடாக வேறு கிராமங்களுக்கு சென்று வாழ முடியும். அத்தோடு வட கொரிய அதிபர் “சீஸ்” (வெண்ணைக் கட்டி) மிகவும் அடிமையானவர். அவரிடம் துப்பாக்கி இருக்கோ இல்லையோ கையில் சீஸ் பாக்கெட் இருக்கும். அதனை அவர் உடைத்து அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். இதன் காரணமாகவே அவர் மிகவும் குண்டாக காணப்படுவதாக. அவரை மிகவும் ரகசியமாக புலனாய்வு செய்த சிலர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் எந்த ஒரு போர் நடந்தாலும், கிம் ஜொங் உன்னை பணியவைப்பது என்பது பெரும் பாடாகவே உள்ளது. மிக மிக தயார் நிலையில் அவர் உள்ளார் என்பது புரிகிறது.