வாகன ஓட்டுனர் உரிமம் அசல் வைக்க உத்தரவிடும் அ.தி.மு.க. தான் பா.ஜனதாவின் ஜெராக்ஸ் அரசாக செயல்படுகிறது என சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வு தொடர்பாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிப்பது குறித்து நீதிமன்றம் சில விதிகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் காவிரி பிரச்சனை தொடர்பாக பெங்களூரில் நடைபெற்ற பிரச்சனைகளின் போதும், முல்லை பெரியாறு பிரச்சனைகளின் போதும் உச்சநீதிமன்றம் உத்தரவை கடைபிடிக்காதது ஏன்?
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சி தேர்தலில் பா. ஜனதாவுடன் கூட்டணி அமைக்க பரிசீலிப்போம் என்று கூறியுள்ளார். அவர் பரிசீலிக்கவில்லை. கூட்டணியே வைப்பார். அதுதான் உண்மை.
தமிழகத்தில் வாகனம் ஓட்டுவதற்கு ஒரிஜினல் லைசென்ஸ் வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் தமிழக அரசுதான் ஜெராக்ஸ் அரசு. ஏன்என்றால் அது பா.ஜனதாவின் ஜெராக்ஸ் போல செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.