விமானம் மற்றும் பிற பொது போக்குவரத்து முறைகளிலும், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் விஷவாயு மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் பொது போக்குவரத்துகளை குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் பொருட்கள் மூலம் விஷவாயு அல்லது ரசாயன பொடிகள், பூச்சுக்கொல்லிகள், அமிலங்கள் மற்றும் நீர் போன்ற எளிதில் தயாரிக்கப்படகூடிய மருந்துகள், உணவு, பானங்கள், அல்லது வீடு துடைக்கும் பொருட்கள் மூலம் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூடப்பட்ட பகுதிகளில் விஷவாயுவால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விமானம், பேருந்து, ரெயில் பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் ரெயில்வே நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்புப்படை வீரர்கள் உஷார்படுத்த்ப்பட்டுள்ளனர்