அச்சுவேலி இராசா வீதியில் அமைந்துள்ள நெசவுத் தொழிற்சாலைக் கட்டடத்தில் அசெம்பிளி ஜீவவார்த்தை ஆலயமாக மாற்றியதற்கு அச்சுவேலிப் பிரதேச மக்கள் எதிர்ப்புத்தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த நெசவுத் தொழிற்சாலையை மீண்டும் இயக்கி தமக்குத் தொழில் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த நெசவுற்பத்தி நிலையமானது யுத்தத்திற்குப் பின்னர் இயங்காததால், அக்கட்டத்தை மத வழிபாட்டிடமாக மாற்றி அங்கு மத வழிபாடு இடம்பெற்று வருகின்றது.
இம்மத வழிபாட்டில் அதிக சத்தமெழுப்பப்படுவதால் அருகிலுள்ளவர்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த கட்டத்தை கைத்தொழில் அமைச்சு பொறுப்பேற்பதுடன், மீண்டும் நெசவுற்பத்தித் தொழிற்சாலையை இயக்கி தமக்கு தொழில்வாய்ப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.