சிறைத் தண்டனைப் பெற்று,சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவையும், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவையும் பார்வையிடுவதற்காக சென்றிருந்த வேளை ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்துக்கொண்டிருந்தபோதே கோபத்தில் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
“சில் ஆடைகளை வழங்குமாறு நானே பணிப்புரை விடுத்தேன். அது தவறல்ல. மக்களிடமிருந்து கிடைத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே நான் பணிப்புரை விடுத்தேன். தேர்தலை நோக்காகக் கொண்டு அவை விநியோகிக்கப்படவில்லை. ஆனால் தேர்தல் காலத்தில் விநியோகிக்கப்பட்டமையினாலேயே தண்டனைக்கு ஆளாக வேண்டிவந்தது” என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
அவரது பதிலின்போது குறுக்கிட்ட ஊடகவியலாளர் ஒருவர், தேர்தல் காலத்தில் சில் ஆடைகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குற்றம் தானே? எனக் கேள்வி எழுப்பினார்.
“நாம் தவறு செய்யவில்லை. புரிந்துகொள்ளுங்கள். எனக்கு கோபமூட்டாதீர்கள். இதனை ஊடக கண்காட்சியாக மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
இதன்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வருகை தந்திருந்தனர்.