21-04-2009 அன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய இன்றைய பாரிய படை நகர்வுத் தாக்குதலில் வலைஞர்மடத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலிலேயே முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் மருத்துவர உளநல மருத்துவர்; சிவா மனோகரன் உட்பட 473 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 722-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மாத்தளன் பகுதியில் படையினர் 20.04.2009 நடத்திய தாக்குதலில் சிக்கிய மக்களை முன்னிறுத்தி 21.04.2009 பாரிய தாக்குதல் நடத்தப்பட்டது இத்தாக்குதலின் போது படையினர் அகோர எறிகணை மற்றும் நச்சுப் புகைத்தாக்குதலையும், கனரக துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.
இதேவேளையில் படையினரின் தாக்குதலினால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையேற்பட்டது
மாத்தளன், பொக்கணை, இடைக்காடு, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீதும் சிறிலங்கா படையினர் அன்று தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்கள்
சிறிலங்கா படையினரின் இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்களினால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கினர். பதுங்குகுழிகளில் இருந்த மக்கள் வெளியேற முடியாது அவதிப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையில் அந்த அந்த இடங்களில் படுத்திருந்தவாறு அவலக்குரல்களை எழுப்பினர்கள்.
-மீள் பதிவு