கண்டியில் தேர்தலில் போட்டியிடவேண்டுமென்ற காரணத்தினால் வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் கக்கீம் மௌனம் காத்து வருகிறார் என சட்டத்தரணி மௌசூர் மௌலானா குற்றம் சாட்டியுள்ளார்.
சேதாரம் இல்லாத விட்டுக்கொடுப்பு பற்றி ரவூப் கக்கீம் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு சேதாரம் பற்றியும் புரியவில்லை, செய்கூலி பற்றியும் புரியவில்லை.
செய்கூலி பற்றித் தெரிந்தவனுக்குத் தான் சேதாரம் பற்றிய வலி தெரியும். வடக்குக் – கிழக்கு இணைப்புத் தொடர்பாக அவர் மௌனம் காத்து வருகின்றார்.
ஏனென்றால் அவர் கண்டியில் தேர்தலில் போட்டியிடவேண்டுமென்றால், அவர் உரித்தோடு வட-கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பாக உரத்த தொனியில் கருத்துத் தெரிவிக்கமுடியாது.
அதேபோல், தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு விம்பமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொறிக்குள் வீழ்ந்துள்ளது.
தமிழ், முஸ்லிம் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படாவிட்டால், இந்தியாவும், அமெரிக்காவும், சீனாவும் இலங்கைக்குள் விளையாடும் சித்து விளையாட்டக்களால் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் இருப்பு கேள்விக்குறியாக மாறும் எனவும்தெரிவித்துள்ளார்