யோஷித ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று (12) ஆஜராக வில்லை என, அவரது சட்டத்தரணி பிரேமலால் சி.தொலவத்தை தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு இன்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், யோஷிதவின் தனிப்பட்ட காரணங்களினால் சமூகமளிக்க முடியவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பாக நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.