பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, குற்றப் புலனாய்வுப் பிரிவு (சீ.ஐ.டி), விரைவில் அழைத்து விசாரணைக்கு உட்படுத்த உள்ளது என்று, அறியமுடிகிறது.
வெலிகடை சிறைச்சாலையில், கைதிகள் 27 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே, குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவு அவரிடம் விசாரணைக்கு உட்படுத்த உள்ளதாக அறியமுடிகிறது.
அவருடன், முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க உள்ளிட்ட, பாதுகாப்பு படைப்பிரிவுகளின் பிரதானிகள் சிலரும் அழைக்கப்படவுள்ளனர் என்று அறியமுடிகிறது.
வெலிகடை சிறைச்சாலையில் இடம்பெற்ற அந்தச் சம்பவம் தொடர்பில், இராணுவம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் சிலரிடம், தற்போதைக்கு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் தெரிவிக்கிறது.