கிளிநொச்சி மாவட்டம் கரைச்சிப் பிரதேச சபைக்குட்பட்ட கனகபுரம் துயிலுமில்லத்தில் கடந்த டிசெம்பர் மாதம் கல்லறை கட்டினார்கள் என கரைச்சிப் பிரதேச செயலகத்தினால் 6 பொதுமக்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி ஆனந்தராஜா வழக்கிலிருந்து 6 பொதுமக்களையும்விடுதலை செய்தார்.
அரசியல் பழிவாங்கல்களுக்கு அமைய இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றில் எடுத்துரைத்துள்ளனர்.
இருதரப்பு விசாரணைகள் நிறைவு பெற்றதை அடுத்து குறித்த 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.