யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட-கிழக்கு மக்களுக்கு 1,20,000ஆயிரம் வீடுகள் தேவையெனவும் , அங்கு 65ஆயிரம் பொருத்து வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன், முதற் கட்டமாக 6,000 ஆயிரம் பொருத்து வீட்டினை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மக்களின் பார்வைக்காக யாழ்ப்பாணத்தில், உரும்பிராய்ப் பிரதேசத்தில் ஒரு பொருத்து வீடு அமைக்கப்பட்டுள்ளதாகவும், வன்னியில் முதற்கட்டமாக 2 பொருத்து வீடுகளும், மட்டக்களப்பில் ஒரு பொருத்து வீடும் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருத்து வீடொன்றினை நிர்மாணிப்பதற்கு 15 இலட்சம் ரூபா நிதி செலவாகும் எனவும், இவை சுமார் 75 வருட ஆயுட்காலத்தினைக் கொண்டதாகவும், 30 வருட உத்தரவாதம் வழங்கப்படுவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.