வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு 290,000 ரூபாய் நிதியில், முதற்கட்டமாக சைக்கிள் வழங்கும் நிகழ்வு, மண்டபத்தடி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நேற்று (16) நடைபெற்றபோது, மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இனவாதம் மற்றும் இனத்துவேசத்தைப் பேசி எதையும் சாதித்து விட முடியாது. தேர்தல் வந்தால் மாத்திரம் தான், மட்டக்களப்பு மாவட்டத்திலே இனவாதம் பேசப்படும். அது, இந்த மாவட்டத்தில் காணப்படும் ஒரு புற்றுநோயாக நான் பார்க்கின்றேன். மற்றைய காலங்களில், யாரும் இதைப்பற்றிப் பேசுவது கிடையாது. அதைப்பற்றிச் சிந்திப்பதும் கிடையாது. ஆனால், அரசியல்வாதிகள் இனவாதம் பேசத் தொடங்கி விட்டார்கள் என்றால், தேர்தல் வரவுள்ளது என நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்.
“இந்த அரசாங்கத்தில் தமிழரோ, முஸ்லிமோ ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வர முடியாது. நமக்கு என்ன தீர்வைத் தருவதாக இருந்தாலும், அது சிங்களத் தலைவர்களால்தான் மாத்திரமே நமக்குக் கிடைக்கும். இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என்று 30 வருடங்களைக் கடந்து இருக்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், நியாயம் பிறக்கப்பட வேண்டும் என்று, நான் 100 சதவீதம் உடன்படுகின்றேன்.
“இவை கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் வெறுமனே உண்ணாமல், பிள்ளைகளைக் கல்வி கற்பிக்கால், ஊரையும் முன்னேற்றாமல், வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளாமல் இருப்போம் என்று சொன்னால், அது எமது மடைமைத்தனம் என்று சொன்னால் மிமையாகாது” என்றார்.