இந்த வாரத்தில், வாகன உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் பாதசாரிகள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தும் செயற்பாடுகள் பல முன்னெடுக்கப்பட உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வீதி விபத்துகள், தற்கொலை உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களுக்கு உள்ளாகி, இலங்கையில் மட்டும் ஒருவருடத்தில் பத்தாயிரம் பேர் மரணமடைகின்றனர் என்றும் திடீர் விபத்துச் சேவை பிரிவு தெரிவித்துள்ளது.
15 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு திடீர் விபத்துகளில் பலியாகுகின்றனர் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் விபத்துகளுக்கு முகங்கொடுக்கின்ற, இலங்கையர்கள் ஐவரில் ஒருவர், அதாவது 4 மில்லியன் பேர், சிசிச்சைகளுக்காக, வைத்தியசாலைகளில் வருடாந்தம் அனுமதிக்கப்படுகின்றனர் என்று தகவல் தெரிவிக்கின்றது.
மிருகங்கள் கடிப்பதனால், ஆகக்கூடுதலான திடீர் விபத்துகள் இடம்பெறுகின்றன. அதுவும், வீடுகளுக்கு அண்மையிலேயே இவ்வாறான சம்வங்கள் இடம்பெறுகின்றன என்றும் அந்த தகவல் சுட்டிக்காட்டியுள்ளது.
திடீர் விபத்துகளில் இரண்டாவதாக, வீதி விபத்துகள் இருப்பதாகவும், இலங்கையில் மணித்தியாலத்துக்கு ஒருவர் வீதி விபத்தால் மரணமடைகின்றார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே, தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று 18ஆம் திகதி முதல் அனுஷ்டிக்கப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.