நாம் எமது உரிமைகளையும், உரித்துக்களையும் , நன்மதிப்பினையும் கொழும்பு அரசிடமிருந்து கேட்கின்றோம். ஆனால் அதே உரிமைகளையும், உரித்துக்களையும், நன்மதிப்பினையும் எம்மருகில் இருக்கும் எம்மக்களுக்குவழங்குகின்றோமா என்பதை எண்ணிப்பார்க்கவேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வணிகக் கண்காட்சியும், தொழிற்சந்தையும் நேற்|று கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதேமேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், ‘சமதளத்தில் ஒன்றாக’ எனும் தொனிப்பொருளில் கண்காட்சி நடத்தப்படுகின்றது. இதன் அர்த்தம் சமதளத்தில் அனைவரும் என்பதே அதன் பொருள். மாற்றுத் திறனாளிகளை சமநிலைக்குக் கொண்டுவருவதே இத்திட்டத்தின் நோக்கம்.
கடந்த போர் காரணமாக பல இழப்புகள் மற்றும் கசப்பான உணர்வுகளுக்குத் தள்ளப்பட்டோம். மாற்றுத் திறனாளிகளாக வலிந்து உருவாக்கப்பட்ட எமது இளைஞர், யுவதிகள் பல்லாயிரக்கணக்கான சோக வலிகளைச் சுமந்தவாறு எம்மிடையே வாழ்கின்றனர்.
அவர்களின் சோகச் சுமை பற்றி எம்மவர்கள் சிலர் சிந்திப்பதில்லை. அவர்களை நாம் அரவணைத்து அன்பு பாராட்டி எம்முடன் அழைத்துச் செல்ல நாம் முன்வரவேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் தாம் பெற்ற பயிற்சியினூடாக அவர்களின் தொழிற்திறன் உற்பத்திகளை இன்றைய கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள்.
அவர்களைஅணுகி உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இக்கண்காட்சி உதவும்.
வலுவுள்ளவர்கள், பணக்காரர்கள், வர்த்தகர்கள்போன்ற பணம்படைத்தவர்கள்உதவி செய்வதில் முன்வரவேண்டும்.
இதனால் மாற்றுத் திறனாளிகளை பிரித்துப் பார்க்கும் செயற்பாடு இல்லாமல்போய் அனைவரும் சமமாக மதிக்கப்படுவர் எனத் தெரிவித்தார்.