20ஆவது திருத்தச் சட்டம் கைவிடப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தயார் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், ‘விரைவில் அத்தேர்தலை நடத்துவது நல்லது என்றே நாங்கள் நினைக்கின்றோம்.
‘2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் குழறுபடிகள், மோசடிகள் நடைபெற்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே ஆசனங்களை இழந்தது. இப்போது தேர்தல் நடைபெற்றால் அவ்வாறான குழறுபடிகள், மோசடிகள் என்பன நடைபெறாது என்றே நினைக்கின்றோம்’. எனத் தெரிவித்தார்.