யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இதற்கான பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்மொழிந்தார்.
இப்பிரேரணையில், யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துத் துயிலுமில்லங்களும் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டு பராமரிக்கப்படவேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள காணிகளை தற்போது பெறப்படமுடியாதுள்ளதாகவும், அவற்றிலிருந்து இராணுவத்தினர் அகற்றப்பட்ட பின்னர் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
ஏனைய துயிலுமில்லங்கள் அமைந்துள்ள காணிகள் அடையாளங் காணப்பட்டு அவற்றை அந்தந்தப் பிரதேச சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டபின்னர் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம், கல்வி, நீர் விநியோகம், போக்குவரத்து, வீடமைப்பு, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.