வெலிஓய, ஜனகபுர பகுதியில், கேரள கஞ்சா உற்பத்தியை மேற்கொள்ளும் சந்தேகநபர்களை பொலிஸார் சுற்றிவளைக்க முற்பட்டபோது, சந்தேகநபர்கள் பொலிஸாரைத் தாக்கியதோடு, கைது செய்து வைத்திருந்த சந்தேகநபரையும் பலாத்காரமாக விடுதலை செய்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களையே, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதுவரையும் இவர்களுடன் சேர்த்து 24 பேரை, இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் கைதுசெய்துள்ளனரெனத் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 3 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சம்பத்நுவர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.