சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுக்களை வைத்திருந்த 4 சீன பிரஜைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 16,200 சட்டவிரோத சிகரெட்டுக்கள், 110 லீட்டர் கோடா மற்றும் 830 கிராம் வல்லப்பட்டை ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(18) முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.