2017 ஓகஸ்ட்டில் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் இரசாயனவியல் வினாக்களை முன்கூட்டியே வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் அவரது சகோதரருக்கு இன்று (18) பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் லலித் கன்னன்கரகே பிணை வழங்கியுள்ளார்.
இவர்கள் ஓர் இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையிலும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.