அரசமைப்பு சபை, எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை காலை, நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இடைக்கால அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
அரசமைப்பு நடவடிக்கை குழுவால், நியமிக்கப்பட்ட ஆறு உப-குழுக்கள் மற்றும் மக்களின் கருத்துகளை அறியும் லால் விஜயநாயக்கவின் அறிக்கை, ஆகியனவற்றை அடிப்படையாக வைத்தே, இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இந்த இடைக்கால அறிக்கையானது, பின்னர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதுடன், அதன்பின்னரே, இறுதியறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அறியமுடிகிறது.