ஐ.நா பொதுச்சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு அஐ.நா பொதுச்சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் மகள் இவங்காவை சந்தித்து பேசியுள்ளார்.திபர் டிரம்ப்பின் மகள் இவங்காவை சந்தித்து பேசியுள்ளார்.
ஐ.நா பொதுச்சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் மகள் இவங்காவை சந்தித்து பேசியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா பொதுச்சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவங்கா டிரம்ப்-ஐ சந்தித்து சுஷ்மா பேசினார்.
பெண்களுக்கான அதிகாரமளித்தல் குறித்து இருவரும் பேசியதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இவங்கா டிரம்ப் விரைவில் இந்தியா வர உள்ளார், அது குறித்தும் இருவரும் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பூடான் நாட்டின் பிரதமர் ஷெரின் டோப்கே, வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஐக்கிய அமீரக வெளியுறவு மந்திரி ஆகியோரையும் சந்தித்து சில நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்.