பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பவுண்டேசனில் நடைபெற்ற சிறைக்கைதிகள் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 பேரின் வழக்குகளை துரிதமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் என்னிடம் உறுதியளித்துள்ளார்.
தான் அவற்றை நாளாந்தம் அடிப்படையில் விசாரணை செய்யுமாறு அழுத்தம்கொடுக்கப்போவதாகவும், வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கவேண்டிய தேவையேற்பட்டால் இரண்டு வாரங்களுக்கு மேற்படாது எனவும்தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த வழக்கு விசாரணைகள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.