கருமுகில் திரள் சூழ்ந்து
கார்கால மழை பொழிந்து
கார்த்திகை திங்கள் தோறும்
கல்லறை வேங்கையரை வாழ்த்திடுமே…..
தீந் தணல் ஈகியரை
தொழுதிட துயிலிடம் தேடி
தீரா வேட்கை கொண்டே
தமிழராய் இணைந்தே செல்வர்……
சனமெலாம் ஒன்றாய் கூடி
செவ்விழி நீர் சுரந்து
செங்களம் உயிர் துறந்தோர்
செந்தாள் பணிந்தே நிற்பர்…..
கார்த்திகைப் பூ வைத்தே
காடைய ரோடச் செய்து
களத்திடை வித்தாகி நின்ற
கடவுளர் போற்றச் செய்வர்…..
சுடரிடை யெழும் ஒளியால்
சுற்றிலும் இருள் அகலும்
சொல் லொணாத் துயரம்
சூழ சுற்றமாய் அணைத்திருப்பர்…..
ஆண்டு பல கடந்தும்
ஆண்ட குடி வீழ்ந்திடுமா
ஆழிப் பேரலையாய் நாளை
ஆற்றலர் மீள் உதிப்பர்…..
தேசியத் தலைவன் வழியைத்
தேடியேத் தமிழ ரெல்லாம்
தீந்தமிழ் புலிக் குடியாய்
தீயென உயர்ந் தெழுவோம்…..
வேற்றினப் பகை முடிக்க
வேண்டிய பணி செய்ய
வேங்கைக் குழு படைத்தே
வெற்றி மீள் அடைவோம்……
– கவிஞர் தம்பியின் தம்பி