போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, பொலிவூட் நடிகர் ஷாருக் கான் போல சிகையை அலங்கரித்துக் கொண்டு, நாடாளுமன்றத்துக்கு நேற்று (19) சமுகமளித்திருந்தார்.
இதனால், சபையில் சிரிப்பொலி எழுந்தது. வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், அவர் பதிலளிப்பதற்கு எழுந்தவேளையில், ‘ஷாருக் கான், ஷாருக் கான்’ என்று சிலர் கிண்டல் செய்தனர்.