ஒரு பூ பாடும் பா -செந்துரன்
பொழுதொன்றே வாழும் மாலை பழுதுண்டு வீழும்
ஒரு பூ பாடும் பூபாலம் கேள் பூலோகம்- மண்ணில்
எழுகின்ற உயிராயுள் ஆலை விழுதென்றே நீழும்
ஆனால என்னாயுள் என்னை விரலொன்றே போதும் -காலை
எகின்ற பகலோன் என்னை ஏவுகிறான் பூமியடி
தொழுகின்ற பத்தன் பத்தன் தூவுகிறன் சாமியடி
மெழுகன்ற என்மேனி தீச்சீறை தூங்குமா –கெஞ்சி
அழுகின்ற தேனியின் கூச்நலைத் தாங்குமா
தினம் ஒன்றில் பிணம் என்றால் -எம்
இனம் மண்ணில் பிறப்பதேனோ பூ
வனம் தன்னில் சினம் என்றால் பூமி
புனல்க் கண்ணைத் திறப்பதேனோ
கோதைமுடி தலையிருத்தல் கோல இதழ்ப் பூவெனக்கு
கொம்புமான் வலையிருத்தல் போன்று –துன்பம்
பாதையடி நிலையிருத்தல் பகலிரவே வாழ்க்கை
ஆழிப் பயணத்தே அலையிருத்தல் சான்று
போதை நிறை பொன்வண்டு பூத்தாடும்
என்னில் கூத்தாடும் காலை
பேதையெனைப் பெற்றமரம் பித்தல்ல
மகவென்றே மறந்து மண்போடும் மாலை
வண்ண மெட்டாய் என்னை வடித்தான்
வாழ்நாள் தன்னை ஒன்றாய் முடித்தான் – இறைவன்
சின்ன சிட்டாய் என்தேன் குடித்தான்
சிறகை விரித்தே பண்தான் படித்தான் -தன்
சின்னத் தாரம் சிரிக்க மின்னல் பூவென்னை
அன்னல் பரிசே கொடுத்தான் -அவள்
கன்னத் தோரம் தரிக்க கரத்தால் மீண்டும் பறிக்க
காலன் தரிசே எடுத்தான்
தண்டாடித் தோட்டம் தானிருக்கும் மலர் -மாலை
தலைவாடி தரைசாயலாம்- தினம்
கொண்டாடிக் கூட்டம் கோடி உலகிருக்க
இப்பூவிழிகள் மட்டும்
அன்றாடன் அலைகூடி நுரை பாயலாம் -அல்லிப்பூ
கண்டாடும் வான்னிலவும் வளர்பிறை கொண்டிருக்க -இந்த
புள்ளிப்பூ தினம் திண்டாடித் தேயலாமா –வந்து
-செந்துரன்
(யாதுமாகி நூலில் இருந்து )