1975ஆம் ஆண்டு வடமாகாணத்திலுள்ள மிகவும் பிரச்சித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களினதும் தொல்லியல் இடங்களினதும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
1975ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த இடங்கள் அனைத்துக்கும் தமிழ் பெயரே காணப்பட்டதாகவும், பின்னர் ஏன் மாற்றப்பட்டது என்பது தொடர்பாக உரிய திணைக்களத்திடம் விளக்கம் கேட்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும்,தொல்லியல் சம்பந்தமாக நிறையப் பிரச்சனைகள் உள்ளன.
மாகாணசபை 13ஆவது திருத்தச் சட்டத்திற்குட்பட்டது. இதன்படி நாம் மத்திய அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டவர்கள். இருப்பினும், இப் பெயர் மாற்றங்கள் தொடர்பாக கேள்வி கேட்கவேண்டிய தேவை எமக்குள்ளது.
அவர்கள் கதைக்கும்போது நன்றாகக் கதைப்பார்கள். ஆனால் செயலில் செய்யமாட்டார்கள்.
உலக வங்கி யாழ்ப்பாணத்தை இலக்கு வைத்து 55 ஆயிரம் மில்லியன் டொலர் நிதியை நன்கொடையாக வழங்குகின்றது.
இந்நிதியின்மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள மந்திரிமனை போன்ற இடங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.