ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல், ஒரு மாத காலம் சிறை விடுப்பில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நாளையுடன் (24) அவரது பரோல் காலம் முடிவடையவுள்ளது. இதைத் தொடர்ந்து, அவரது தந்தைக்கு, மேலும் இரு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளதால், பேரறிவாளனின் சிறை விடுப்பை, மேலும் நீட்டிக்க வேண்டும் என்று, தாய் அற்புதம்மாள், தமிழக அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.